முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#ஆரோக்கிய
முருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:
நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)

#ஆரோக்கிய
முருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:
நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. முருங்கை கீரை சாறு செய்வதற்கு:
  2. 1 கட்டுமுருங்கை கீரை
  3. 1வெங்காயம்
  4. 4வரமிளகாய்
  5. 1 டேபிள் ஸ்பூன்சீரகம்-
  6. 1/2 கப்தேங்காய் துருவல்
  7. 5-8 கப்சோறு வடித்த கஞ்சி
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  10. முருங்கை கீரை பொரியல் செய்வதற்கு:
  11. 1 கட்டுமுருங்கை கீரை
  12. 1 டீஸ்பூன்கடுகு
  13. 1 டீஸ்பூன்சீரகம்
  14. 2வரமிளகாய்
  15. 1வெங்காயம்- (பொடியாக நறுக்கிய து)
  16. 1 டீஸ்பூன்கீரை பொடி
  17. தேவைக்கேற்பஉப்பு
  18. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  19. 1/4 கப்தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கீரை பொரியல்:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம், வரமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    பின் கீரையை போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    கீரை வதங்கியதும் உப்பு மற்றும் கீரை பொடி சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    கடைசியில் தேய்ங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

  5. 5

    முருங்கை சாறு:ஒரு கடாயில் சீரகம்,வரமிளகாய் மற்றும் தேய்ங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  6. 6

    சூடு குறைந்தது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

  7. 7

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  8. 8

    வெங்காயம் வதங்கியதும் கீரை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  9. 9

    பின் எடுத்து வைத்த சோறு வடித்த கஞ்சியில் அரைத்த விழுதை மற்றும் உப்பு சேர்த்து கலக்கி அடுப்பில் ஊற்றவும்.(உப்பு கஞ்சியில் ஏற்கனவே இருப்பதால், குறைவாக சேர்க்கவும்)

  10. 10

    5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes