காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)

காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொங்கல் செய்முறை : குக்கரில் அரிசி, பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
குக்கரில் நெய் சேர்த்து இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 3
காய் ஓரளவு வதங்கியதும் கழுவி சுத்தம் செய்து வைத்த அரிசி, பருப்பு, உப்பு சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி 5 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனதும் மூடியை திறந்து ஒன்று சேர கிளறி சிறிதளவு மசித்து விடவும்.
- 4
பின்னர் தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் விட்டு சீரகம்,மிளகு,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி வேக வைத்து எடுத்த பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவைப்பட்டால் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான கம கம காய்கறி பொங்கல் தயார்.
- 5
சாம்பார் செய்முறை : முதலில் புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் பருப்பு, பூண்டு பல், பெருங்காயத்தூள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 6
பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை சிறிதாக கட் செய்து சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வாசனை போனதும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
பிறகு வேக வைத்த பருப்பை சிறிது மசித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்து கிளறி விடவும். காய் வேகும் வரை ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு புளி கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து கொள்ளவும்.
- 8
காய்கறிகள் வெந்ததும் புளி கரைசலை ஊற்றவும்.சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான காய்கறி சாம்பார் தயார். கம கம காய்கறி பொங்கலுடன் சாம்பார் சேர்த்து சூடாக பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)
கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6 Sundari Mani -
-
-
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட்