பீஸ் பனீர் சுக்கா (peas paneer sukka recipe in tamil)

Iswarya
Iswarya @cook_17224977

பீஸ் பனீர் சுக்கா (peas paneer sukka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம்பன்னீர்
  2. 1/2 கப்பச்சை பட்டாணி-
  3. 1பெரிய வெங்காயம்- (பொடியாக நறுக்கியது)
  4. 1தக்காளி-பொடியாக நறுக்கியது)
  5. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 1 1/2 ஸ்பூன்தனியா தூள்
  7. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1 1/2 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  10. 1 ஸ்பூன்சீரக தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 3 அ 4 கரண்டிஎண்ணெய்
  13. 2 கொத்துகருவேப்பிலை
  14. 1/2 ஸ்பூன்கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பனீரை உதிரியாக உதிர்ந்து வைத்துக்கொள்ளவும். பச்சை பட்டாணியை தோலுரித்து 5 நிமிடத்திற்கு ஷசிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு சேர்த்து பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் கருவேப்பிலை சேர்க்கவும் (இந்த சுக்கா வின் முக்கியமான பொருள் இதுதான், நிறைய சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்)

  3. 3

    பின்னர் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.. இத்துடன் தனியா தூள், சீரகத் தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வேக வைத்த பட்டாணியை சேர்த்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும். பின்னர் உதிர்த்த பனீரையும் சேர்த்து 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்..

  5. 5

    மணமான பீஸ் பனீர் சுக்கா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Iswarya
Iswarya @cook_17224977
அன்று

Similar Recipes