ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)

Fma Ash
Fma Ash @cook_20061862

இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

#myfirstrecipe
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

01 மணித்தியாலம்
08 நபர்கள்
  1. தேவையான பொருட்கள்சிக்கனை மேரினேட் செய்ய
  2. 1 கிலோ சிக்கன்
  3. 2 ஸ்பூன் தயிர்
  4. தேவையானளவு உப்பு
  5. 4டீஸ்பூன் சீரகத்தூள்
  6. 3டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 3டீஸ்பூன் சிக்கன் மசாலா
  8. 5டீஸ்பூன் கொத்தமல்லித்தூள்
  9. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 2டீஸ்பூன் மிளகு தூள்
  11. 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு அரைத்தது
  12. 1 மேகி சூப் கட்டி
  13. 3டீஸ்பூன் தக்காளி சோஸ்
  14. 1 தக்காளி
  15. 1 கப் தண்ணீர்
  16. அரிசியை வேக வைக்க தேவையான பொருட்கள்
  17. 7 கப் சீரக சம்பா அரிசி
  18. 4 ஸ்பூன் நெய்
  19. தேவையானளவு கருவேப்பிலை மற்றும் ரம்பை
  20. 3 ஏலக்காய்
  21. 2 பட்டை
  22. 1 பெரிய வெங்காயம்
  23. 2 தக்காளி
  24. 4 பச்சை மிளகாய்
  25. 3 பெரிய உருளைக்கிழங்கு
  26. பிரியாணிக்கு மேலும் ருசி சேர்க்க தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
  27. 3 ஸ்பூன் நெய்
  28. 2 பெரிய வெங்காயம்
  29. 5 பூண்டு லேசாக தட்டியது
  30. 2 பிரியாணி இலை
  31. சிறிதளவுகருவேப்பிலை
  32. 3 கிராம்பு
  33. 4 ஏலக்காய்
  34. 3பட்டை
  35. தேவையானளவு கஜு
  36. சிறிதளவுபொட்டுக்கடலை
  37. சிறிதளவுபிளம்ஸ்
  38. சில துளிகள் எஸ்சென்ஸ்
  39. 1/4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

01 மணித்தியாலம்
  1. 1

    முதலாலது படி
    சிக்கன் மெரினேஸன்

    * 1 கிலோ சிக்கனை அளவான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனுடன்
    மேரினேட்டுக்கு தேவையான பொருட்களையும் 1 கப் தண்ணீரையும் சேர்த்து, நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.

    * இரவு முழுவதும் பிரீஸரில் (உறைவிப்பான் / குளிரூட்டியின் அதி குளிரான மேற்பகுதி) ஊற வைக்கவும்.

    * இரவு முழுவதும் ஊற வைப்பதால், பிரியாணியின் சுவை மேலும் மெருேகரும்.

    * அடுத்த நாள் சமைக்க ஆரம்பிக்க 1 மணி நேரத்துக்கு முன்பே சிக்கனை குளிரூட்டியிலிருந்து வெளியில் எடுத்து வைக்கவும்.

  2. 2

    இரண்டாவது படி
    தம் போடுதல்

    * நன்றாக அரிசியை கழுவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * ரைஸ் குக்கரை ஒன் செய்து, அதில் 4 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

    * பின்பு தேவையானளவு கருவேப்பிலை மற்றும் ரம்பை, ஏலக்காய், பட்டை சேர்த்து கிளறவும்.

    * சிறிதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, பொன்னிறமாகும் வரை கிளறவும்.

    * பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி மசியும் / மென்மையாகும் வரை வதக்கவும்.

    * ஊற வைத்த சிக்கனுடன் வெட்டிய உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    சிக்கனை சமனாக ரைஸ் குக்கரின் அடியில் பரப்பி கொள்ளவும்.

    * பின்னர் ஊற வைத்த அரிசியை சிக்கனின் மேல் மெதுவாக பரப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரிசியை வேக விடவும்.

    * ஆவி வெளியேறாதவாறு நன்றாக ரைஸ் குக்கரையும் மூடி, அதிலுள்ள துளைகளையும் துணியால் மூடி, ரைஸ் குக்கரின் மேல் பாரமான பொருளொன்றை வைக்கவும்.

  4. 4

    மூன்றாவது படி
    தாளித்தல்

    * கடாயொன்றை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

    * சிறிதாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, பொன்னிறமாகும் வரை தாளிக்கவும்.

    * பின்னர் மீதமுள்ள தாளிப்பதற்கு தேவையான பொருட்களையும் சேர்க்கவும்.
    * இறுதியாக பிளம்ஸ்ஸை சேர்க்கவும். இல்லாவிட்டால் பிளம்ஸ் கருகி விடும்.

  5. 5

    ரைஸ் குக்கர் ஆப் ஆனவுடன், தாளித்த பொருட்களையும், 2 ஸ்பூன் நெய் மற்றும் 1/4 கப் தண்ணீரில் கலந்து வைத்த எஸ்சென்ஸையும் பிரியாணியில் சேர்த்துக் கொள்ளவும்.

    * கம கமக்கும் சுவையான ரைஸ் குக்கர் தம் பிரியாணி ரெடி.

    * சாதம் மற்றும் அடியில் உள்ள சிக்கனையும் நன்றாக கலந்து பின் பரிமாறவும்.

    * மேற்கூறிய அளவில் செய்தால், 8 பேர் வயிராற சாப்பிடலாம்.

  6. 6

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes