முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

# book
# அன்பானவர்களுக்கு சமையல் போட்டி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. முட்டைகோஸ்-1 சிறியது
  2. பெரிய வெங்காயம்-2
  3. குடைமிளகாய்-1/2
  4. இஞ்சி பூண்டு- 2 டீஸ்பூன்
  5. மிளகு தூள்-1 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
  7. மைதா மாவு-4 டீஸ்பூன்
  8. கார்ன் பிளவர் மாவு-3 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  11. வெண்ணெய்-1 டீஸ்பூன்
  12. சோயா ஜாஸ்-1 டீஸ்பூன், சில்லி ஜாஸ்-2 டீஸ்பூன், தக்காளி ஜாஸ்-3 டீஸ்பூன்
  13. மிளகாய்த்தூள்-1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. முட்டைகோஸ், வெங்காயம், இஞ்சி பூண்டு, குடைமிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்..1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ரெடி செய்து கொள்ளவும்.. முட்டைகோஸ் உடன் மைதா மாவு மற்றும் கார்ன் பிளவர் மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டைகோஸ் கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு, குடைமிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்... உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் ஜாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்... ஒரு டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.

  3. 3

    மஞ்சூரியன் கிரேவி ரெடி ஆனதும் பொரித்த முட்டைகோஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. தேவைப்படின் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்பிரிங் ஆனியன் கலந்து கொள்ளவும்... சூடான சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்

  4. 4

    குறிப்பு;- முட்டைகோஸ் சில குழந்தைகள் சாப்பிட மறுக்கும் பொழுது இப்படி செய்து கொடுக்கலாம்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes