உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#nutrient1
முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30  minutes
4 பரிமாறுவது
  1. முட்டை 5
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 3
  4. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 1
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. காஷ்மீர் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. கரமசாலா 1 ஸ்பூன்
  10. சிக்கன் மசாலா 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. மல்லி தூள் 1 ஸ்பூன்
  13. தேங்காய் 1/4 கப்
  14. பொட்டுகடலை 1 ஸ்பூன்
  15. முந்திரி பருப்பு 4
  16. சீரகம் 1 ஸ்பூன்
  17. மிளகு 1 ஸ்பூன்
  18. எண்ணெய் 3 ஸ்பூன்
  19. சோம்பு 1 ஸ்பூன்
  20. கொத்தமல்லி சிறிதளவு
  21. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30  minutes
  1. 1

    முதலில் வெங்காயம், தக்காளி, இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பொட்டுகடலை,மிளகு, சீரகம், முந்திரி பருப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.

  3. 3

    குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.சிக்கன் குழம்பு சுவையில் முட்டை குழம்பு தயார். நன்றி.

  4. 4

    இதில் மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் பேஸ்ட் சேர்த்து உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes