தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. முட்டை-5
  2. அரிசி-400 கிராம்
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-1
  5. இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
  6. பட்டை-1 சிறிய துண்டு
  7. ஏலக்காய்-3
  8. லவங்கம்-3
  9. பிரிஞ்சி இலை-2
  10. பச்சை மிளகாய்-4
  11. புதினா இலை-1/4 கப்
  12. மல்லி தழை-1/2 கப்
  13. எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன்
  14. சிவப்பு மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  15. பிரியாணி மசாலா-2 டீஸ்பூன்
  16. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  17. கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
  18. நெய்-2 டேபிள் ஸ்பூன்
  19. எண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்
  20. உப்பு-தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை கழுவி,அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின் முட்டையை அவித்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு பௌலில் உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அவித்த முட்டையை அதில் சேர்த்து கிளறி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த முட்டையை லேசான வதக்கி எடுக்கவும்.

  5. 5

    ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

  6. 6

    பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  8. 8

    தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கி,பின் அதில் மல்லி தழை, புதினா இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    சிவப்பு மிளகாய் தூள்,கரம் மசாலா மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து கிளறவும்.

  10. 10

    பின் அதில் ஊற வைத்த அரிசியை போட்டு,தண்ணீர் ஊற்றவும் வேக விடவும்(1 கப் அரிசி1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்)

  11. 11

    முக்கால் பாகம் வெந்ததும்,பொரித்த முட்டையை அதில் வைத்து 15-20 நிமிடம் வரை தம் போட்டு இறக்கவும்.

  12. 12

    சுவையான முட்டை பிரியாணி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes