எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. ஆட்டுக்கால் - 4
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 3
  4. கொத்தமல்லி இலை
  5. புதினா
  6. மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
  7. மிளகுத்தூள் - ‌‌2 மேஜைக்கரண்டி
  8. சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
  9. கறிமசாலா - 1 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  11. கருவேப்பிலை
  12. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நன்றாக சுத்தம் செய்து சுட்டேடுத்த ஒரு ஆட்டுக்காலை துண்டுகளாக வெட்டிக் குக்கரில் போட்டு கொள்ளவும்

  2. 2

    அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மசாலா தூள்கள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிவரும் போது குக்கரை மூடி 5 விசில் 20 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நீள்வாக்கில் வெட்டிய வெங்காயம் கருவேப்பிலை தாளித்து பாயா உடன் கலந்து கொதிக்க விடவும்.

  4. 4

    ஆட்டுக்கால் பாயா தயார்.

  5. 5

    குறிப்பு : ஆட்டுக்கால் வேகவைக்கும் நேரம் காலின் தன்மையை பொருத்து கணித்துக்கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes