தேவையான பொருட்கள்

45Mins
4 பரிமாறுவது
  1. சிவப்பு கொண்டைக்கடலை 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. சின்ன வெங்காயம் 12
  4. பச்சை மிளகாய் 1
  5. தக்காளி 1
  6. புளி தண்ணீர் சிறிது
  7. துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  8. வறுத்து அரைக்க
  9. ஆயில் 2 டீஸ்பூன்
  10. பட்டை 1 சிறிய துண்டு
  11. கிராம்பு 1
  12. கசகசா சிறிது
  13. வர மிளகாய் 5
  14. கடலை பருப்பு 1 1/2டீஸ்பூன்
  15. தனியா௧1 டீஸ்பூன்
  16. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  17. இஞ்சி 1 துண்டு
  18. பூண்டு 2 பல்
  19. கொத்தமல்லி இலை சிறிது
  20. உப்பு
  21. தாளிக்க
  22. ஆயில் 1 டீஸ்பூன்
  23. கடுகு 1/2 டீஸ்பூன்
  24. கருவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    சிவப்பு கொண்டைக்கடலை கழுவி இரவு ஊற விடவும்.ஊறிய கொண்டைக்கடலையை 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில் வேக விடவும்.வேகவிட்டு தண்ணீர் வடித்த விடவும்.துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் வேகவிடவும்.துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 1 1/2 டீஸ்பூன்,வரமிளகாய் 5,கசகசா சிறிது,தனியா 1 டீஸ்பூன்,பட்டை 1,கிராம்பு 1,கொத்தமல்லி இலை,இஞ்சி 1 துண்டு,பூண்டு 2 பல் எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் சேர்த்து கடலை பருப்பு தனியா துருவிய தேங்காய் பட்டை கிராம்பு வரமிளகாய் இஞ்சி பூண்டு கொத்தமல்லி கசகசா சேர்த்து வதக்கவும்.வறுத்து அரைக்கவும்.துவரம் பருப்பு வெந்தது சிறிது எடுத்து வைக்கவும்.

  3. 3

    புளி சிறிது ஊறவிட்டு புளி தண்ணீர் கரைத்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 12 தோல் உரித்து கழுவி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் 1 நறுக்கியது சேர்த்து வதக்கி பருப்பு தண்ணீரில் சேர்க்கவும்.

  4. 4

    பருப்பு தண்ணீரில் அரைத்த விழுது தாளித்த வெங்காயம் தக்காளி கொண்டைக்கடலை புளி தண்ணீர் சிறிது ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.குக்கரில் 1 விசில் விடவும்.சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி.சாதத்திற்கு ஏற்றது.இட்லி தோசைக்கும் ஏற்றது.😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes