பாசிபயிறு கட்லெட்

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#குழந்தைகள்

பாசிபயிறு கட்லெட்

#குழந்தைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசிபயிறு - 1/4 கப்
  2. வெங்காயம் - 50 கிராம்
  3. 2பச்சை மிளகாய் -
  4. இஞ்சி - அரை அங்குலம் அளவு
  5. உருளைக்கிழங்கு - 1 பெரியது
  6. பிரெட் - 2 துண்டு
  7. மல்லித்தூள் - 3/4 டீஸ்பூன்
  8. கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  10. .ரஸ்க் பவுடர் - 1/2 கப்
  11. மைதா - 1 டேபிள்ஸ்பூன்
  12. மல்லிதழை- சிறிதளவு
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிபயிறை நன்கு வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்

  3. 3

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  4. 4

    பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும்.

  5. 5

    பாசிபயிறு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து மிதமாக பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பின்னர் இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள்,மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

  7. 7

    மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  8. 8

    கட்லெட் துண்டுகளை மைதா மாவு கரைசலில் நன்கு முக்கி எடுத்து ரஸ்க் தூளில் பிரட்டி தோசைகல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருபுறமும் வெந்து சிவக்கவும் எடுக்கவும்.

  9. 9

    தக்காளி 🍅 சாஸூடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes