எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மட்டன்1 கிலோ
  2. அரிசி மாவு 600 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது 70 கிராம்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 3
  6. பச்சை மிளகாய் 3
  7. மிளகாய்தூள் 2 ஸ்பூன்
  8. கறி மசால் தூள் 50 கிராம்
  9. மல்லிதழை
  10. பட்டை லவங்கம் ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்
  11. பெரிய தேங்காய் 2,
  12. எண்ணெய்
  13. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசி மாவில் ஒரு தேங்காய் துருவி போட்டு நன்கு வறுத்துக் எடுத்துக் கொள்ளவும், பிறகு இன்னொரு தேங்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம் தக்காளி மல்லிதழை அனைத்தும் நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு அடி கனமான பெரிய பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கவும், பிறகு அதில் ப மிளகாய் தக்காளி மல்லிதழை போட்டு நன்கு வதக்கவும்,

  2. 2

    வதங்கியதும் அதில் மட்டன் போட்டு கறி மசால்தூள் போட்டு நன்கு வேக விடவும், பிறகு 6 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், அரிசி மாவில் கொதித்த அந்த மசாலா தண்ணீர் ஊற்றி கிளறவும். பிறகு கொதிக்கும் மசாலா தண்ணீரில் அரைத்த தேங்காயை ஊற்றி கொதிக்க விடவும், கொதித்ததும் கிளறிய மாவை கொழுக்கட்டை பிடிக்கவும்,

  3. 3

    பிடித்த கொழுகட்டையை கொதிக்கும் மசாலா தண்ணீரில் மெதுவாக போடவும், போட்டு ஸ்ட்வ்வை மீடியம்மாக வைத்து மூடிவிடவும், இடை இடையே கிளறி விடவும், கொழுக்கட்டை வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான மட்டன் தக்கடி தயார்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

Similar Recipes