மினி பேன் பீட்ஸா

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ஸ்நாக்ஸ் #book #goldenapron3

மினி பேன் பீட்ஸா

#ஸ்நாக்ஸ் #book #goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300கிராம் மைதா
  2. 1 1/2ஸ்பூன் டிரை ஈஸ்ட்
  3. 2ஸ்பூன் சர்க்கரை
  4. 1/2கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  5. 2தக்காளி
  6. 1வெங்காயம்
  7. 10பல் பூண்டு
  8. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1ஸ்பூன் தக்காளி சாஸ்
  10. 1நீளமாக நறுக்கிய மஞ்சள் நிற குடைமிளகாய்
  11. 1நீளமாக நறுக்கிய பச்சை நிற குடைமிளகாய்
  12. 1நீளமாக நறுக்கிய சிவப்பு நிற குடைமிளகாய்
  13. துருவிய சீஸ் தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. சில்லி பிளேக்ஸ் தேவையான அளவு
  16. துளசி இலை தேவையான அளவு
  17. ஓமவல்லி இலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்

  2. 2

    கலந்த தண்ணீரை அப்படியே 1/2 மணிநேரம் வைக்கவும்.. இப்போது அது நன்கு நுரைத்திருக்கும்...

  3. 3

    அதில் மாவை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து அதன் மேல் காயாமல் இருக்க 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஈரத்துணியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்..

  4. 4

    தக்காளி, வெங்காயம், பூண்டு மூன்றையும் ஒன்றாக கலந்து வேகவிடவும்

  5. 5

    வெந்து ஆறியதும் அதை நன்றாக அரைத்து அதில் மிளகாய் தூள், 1 ஸ்பூன் சர்க்கரை, தக்காளி சாஸ், உப்பு, துளசி, ஓமவல்லி பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொதிக்க விடவும்..

  6. 6

    இப்போது பீட்ஸா சாஸ் தயார்..

  7. 7

    இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரண்டு மடங்காக இருக்கும்.. அதை மிருதுவாக பிசையவும்

  8. 8

    ஒரு சிறு உருண்டையை எடுத்து தடியான சப்பாத்தி போல் இடவும்... அதில் முள் கரண்டி கொண்டு லேசாக குத்தவும் எதற்காக என்றால் வேகும் போது உப்பி வராமல் இருக்க..

  9. 9

    அதன் மேல் பீட்ஸா சாஸ் தடவவும்.. அதன் மேல் காய்கறிகளை அடுக்கவும்...

  10. 10

    அதன் மேல் துளசி, ஒமவல்லி இலையை தூவவும்

  11. 11

    அதன் மேல் துருவிய சீஸ் அதன் மேல் சில்லி பிளேக்ஸ் தூவவும்

  12. 12

    அடுப்பில் ஒரு தோசை கல்லை அதிக தீயில் 10 நிமிடம் வரை சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பீட்ஸாவை ஒரு நாண்ஸ்டிக் தோசைகல்லில் வைத்து மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்

  13. 13

    இப்போது சுவையான மினி பேன் பீட்ஸா தயார்...

  14. 14

    இதனை முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes