எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4பேர்
  1. 1 பௌல் -சாதம்
  2. 1 -மாங்காய்
  3. 1 -பெரிய வெங்காயம்
  4. 5 -பல் பூண்டு
  5. 2 -பச்சை மிளகாய்
  6. ஒரு கொத்து -கறிவேப்பிலை
  7. சிறிது -கொத்தமல்லி இலை
  8. தேவையானஅளவு-எண்ணெய்
  9. தேவையானஅளவு -உப்பு
  10. 1/2-டீஸ்பூன் -மஞ்சள் தூள்
  11. 1/2-டீஸ்பூன் -கடுகு
  12. 1டீஸ்பூன் -கடலைப்பருப்பு
  13. 1-டீஸ்பூன் -உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மாங்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு தாளித்து அதன்பின் நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் துருவிய மாங்காய் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

  2. 2

    அதன்பின் சாதம் சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி பரிமாறவும்.

  3. 3

    வித்தியாசமான சுவையில் மாங்காய் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vidhyashree Manoharan
Vidhyashree Manoharan @cook_22267268
அன்று

Similar Recipes