தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் பொடித்த சர்க்கரை
  3. 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/4டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1டீஸ்பூன் ரவை
  6. 2டீஸ்பூன் கடலை மாவு
  7. 1 கப் உருக்கிய நெய்
  8. 1 சிட்டிகை உப்பு
  9. அலங்கரிக்க
  10. 2 உடைத்த பாதாம்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    1 கப் மைதா மாவு சலித்து எடுத்து வைக்கவும்.நெய் 1 கப் உருக்கி வைக்கவும்.சர்க்கரை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.ரவை 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.கடலை மாவு 2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்,உப்பு 1 சிட்டிகை எடுத்து வைக்கவும். பாதாம் 2 உடைத்து வைக்கவும்.கிண்ணத்தில் பொடித்த சர்க்கரை உருக்கிய நெய் சேர்த்து கலக்கவும்.2 நிமிடம் கலக்கியவுடன் ரவை கடலை மாவு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    கலக்கி,அதில் பேக்கிங் பவுடர்,உப்பு 1 சிட்டிகை,1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பீட் செய்து மாவை உருண்டையாக உருட்டி வைக்கவும்.குக்கரில் உப்பு சேர்த்து சூடாக்கி வைக்கவும். சிறிய தட்டு வைக்கவும்.

  3. 3

    அதன் மேலே தட்டில் நெய் தடவி, மாவை பிஸ்கட்களாக தட்டி நடுவில் உடைத்த பாதாம் வைத்து அடுக்கி வைக்கவும்.15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.குறிப்பு :குக்கர் காஸ்கெட் எடுத்துவிட்டு மூடி வைக்கவும்.சுவையான குக்கீகள் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes