Sprouted salad/முளைகட்டிய சாலட்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

Sprouted salad/முளைகட்டிய சாலட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1 கப் முளைகட்டிய பச்சைபயிறு
  2. 2 டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  3. 1 கேரட்
  4. 1 தக்காளி
  5. 1/2 வெள்ளரிக்காய்
  6. 1/4 குடை மிளகாய்
  7. 1/2டீஸ்பூன் சீரக தூள்
  8. உப்பு
  9. 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
  11. கொத்தமல்லி தழை
  12. புதினா இலை
  13. 1/2 எலுமிச்சை பழம் சாறு

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    முளை கட்டிய பச்சைபயிறு 1 கப்,சுடு தண்ணீரில் 3 நிமிடம் போட்டு வடித்து விடவும். மிருதுவாக இருக்கும்.

  2. 2

    வறுத்த வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன் ஒன்று இரண்டாக நுணுக்கி வைக்கவும். 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் சீராக தூள்,உப்பு சிறிது ஆலிவ் ஆயில் 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.கேரட் 1 தோல் நீக்கி கழுவி துருவி வைக்கவும்.1/4 குடை மிளகாய் கழுவி நறுக்கி வைக்கவும்.1/2 வெள்ளரிக்காய் தோல் சீவி நறுக்கி வைக்கவும். தக்காளி 1 நறுக்கி வைக்கவும். வடித்து வைத்த முளைகட்டிய பச்சைப்பயிறு, புதினா இலை, கொத்தமல்லி தழை எடுத்து வைக்கவும்.கிண்ணத்தில் சீராக தூள் உப்பு மிளகாய் தூள் ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி வெள்ளரி கேரட்,

  3. 3

    தக்காளி சேர்த்து மீதம் உள்ள முளை கட்டிய பயிறு புதினா கொத்தமல்லி சேர்த்து கலக்கி, 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து நுணுக்கிய வேர்க்கடலை தூவி கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes