மல்டி க்ரேய்ன் பொடி

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Nutrient1 book
பருப்பு வகைகளில் புரதச் சத்து
அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. உளுத்தம்பருப்பு ஒரு கப்
  3. கடலைப்பருப்பு ஒரு கப்
  4. எள்ளு 4 ஸ்பூன்
  5. பச்சைப்பயிறு முக்கால் கப்
  6. வறுத்த வேர்க்கடலை அரை கப்
  7. முந்திரி 7
  8. பாதாம்பருப்பு 7
  9. வருகடலை அரைக் கப்
  10. கல் உப்பு ஒரு ஸ்பூன்
  11. காரத்திற்கு தேவையான வரமிளகாய்
  12. பெருங்காயத்தள் அரை ஸ்பூன்
  13. மிளகு ஒரு ஸ்பூன்
  14. சீரகம் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் 2 ஸ்பூன் விட்டு சூடானதும் துவரம் பருப்பை போட்டு சிம்மில் வைத்து சிவக்க வறுத்து எடுக்கவும். அடுத்ததாக பச்சைப்பயறு சிம்மில் வைத்து மணம் வரும் வரை வறுக்கவும். அதேபோல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு ஜீரகம் லேசாக வறுத்து முந்திரி பாதாமை போட்டு அதனுடன் பிரட்டி வறுத்த வேர்கடலை அதனுடன் போட்டு வறுத்து எடுக்கவும. எள்ளு கழுவி சுத்தம் செய்து தனியாக வறுத்து கொட்டவும்.

  2. 2

    காரத்திற்கு தேவையான மிளகாயை வறுத்துக் கொட்டவும். பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து வறுத்துக் கொட்டவும்.அடுப்பை அனைத்து விட்டு வாணலியில் உள்ள சூட்டில் அரை கப் வருகடலை லேசாக வறுத்துக் கொட்டவும். தேவையான உப்பு சேர்க்கவும்

  3. 3

    வறுத்து எல்லாவற்றையும் ஒரு தட்டில் கொட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் மிளகாய் பருப்பு முந்திரி பாதாம் வேர்க்கடலை சற்று நைசாக அரைத்து எடுக்கவும்.பிறகு மற்ற பொருட்களையும் போட்டு இட்லி பொடி அரைப்பது போல் சற்று கரகரவென்று அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சுவையான காரமான புரதம் கால்சியம் நிறைந்த மல்டி கிரெயின் பொடி தயார்.

  4. 4

    சாதத்துடன் போட்டு நெய் ஊற்றி சாப்பிடலாம். இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம். குழம்பு வைக்காத போது இந்த பொடி நமக்கு சாதத்திற்கு பிசைந்து சாப்பிட ஏற்றது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு இந்த பொடி இரண்டு ஸ்பூன் போட்டு உதிராக வடித்த சாதத்தைப் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் போட்டு தரலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes