உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#nutrient2 உருளைக்கிழங்கு கிரீன் கறி செய்யும் பொழுது சோயா கிரானுல்ஸ் இதனுடன் சேர்த்து செய்து பார்த்தேன் . சுவையோ அருமை 😋

உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)

#nutrient2 உருளைக்கிழங்கு கிரீன் கறி செய்யும் பொழுது சோயா கிரானுல்ஸ் இதனுடன் சேர்த்து செய்து பார்த்தேன் . சுவையோ அருமை 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
2 பரிமாறுவது
  1. 2 உருளைக்கிழங்கு
  2. 1 பிடி கொத்தமல்லி இலை
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 பத்தை தேங்காய்
  5. 10மீல்மேக்கர் or 1/2 கப் சோயா கிரானுல்ஸ்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  9. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வேக வைக்கவும்.மிக்ஸியில் மீல்மேக்கரை பொடித்து அதில் ஒரு வடிகட்டி வைத்து சுடு தண்ணீர் ஊற்றி அலம்பி வடித்து வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் கொத்தமல்லி இலை, தேங்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, 2 முந்திரி பருப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் கடுகு சீரகம் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது மற்றும் சோயா கிரானுல்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி பொரியல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes