சீரக சம்பா சிக்கன் பிரியாணி (Seeraga samba chichen biryani Recipe in Tamil)

amrudha Varshini
amrudha Varshini @amrudha_1581998
Kanyakumari
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

7பேர்
  1. 3 கப் சீரக சம்பா அரிசி
  2. 5 கப் தண்ணீர்
  3. 1/2 கிலோ கோழி இறைச்சி
  4. 4 வெங்காயம்
  5. 1 பெரிய அளவு தக்காளி
  6. 8பச்சை மிளகாய்
  7. 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2 கப் தயிர்
  9. கைப்பிடியளவுபுதினா
  10. அரை கைப்பிடியளவுமல்லித்தழை
  11. கற மசாலா (அனைத்து பொருட்களும் உள்ளடக்கியது)
  12. 1 மேஜைக்கரண்டி வத்தல் பொடி
  13. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  14. 5 மேஜைக்கரண்டி எண்ணெய்
  15. 1/2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
  16. 4 மேஜைக்கரண்டி நெய்
  17. 6-8 முந்திரி
  18. 5-6 கிஸ்மிஸ் பழம்
  19. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கோழி இறைச்சியை நன்றாக கழுவி அதில் தயிர், எலுமிச்சை சாறு, வத்தல் பொடி, மஞ்சள் தூள் போட்டு நன்றாக கிளறி வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    3 கப் அரிசியை நான்கு கப் அளவு தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    இப்போது பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கற மசாலா (சோம்பு,பிரியாணி இலை, ஏலக்காய்,பட்டை, அன்னாசி பூ, கிராம்பு, கசகசா) ஒரு வீதம் சேர்க்க வேண்டும். இதில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் வதங்கியதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து மிக நன்றாக வதங்கியதும் புதினா மற்றும் மல்லித்தழையை சேர்க்கவும்.

  5. 5

    அடுத்து இறைச்சி கலவையை சேர்த்து நன்கு கிளறி வதக்கி விட்டு 1கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து இறைச்சியை அரை வேக்காடு வேக வைக்கவும்.

  6. 6

    இப்போது இறைச்சி அரை வேக்காடு வெந்ததும் இதில் அரிசியை ஊற வைத்த நான்கு கப் தண்ணீரை இதில் விட்டு கொதி வந்ததும் உப்பு சரிபார்த்து அரிசியை போட்டு மிதமான தீயில் மூடி போட்டு வைத்து கொள்ள வேண்டும்.

  7. 7

    10 நிமிடம் கழித்து திறந்தால்
    ட்டடாஆ பிரியாணி தயார்.

  8. 8

    கடைசியாக நெய்யில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை வதக்கி பிரியாணியில் ஊற்றினால்....ஆகா.....வீடே கமகமக்கும் அருமையான சீரக சம்பா பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

amrudha Varshini
amrudha Varshini @amrudha_1581998
அன்று
Kanyakumari
Love cookingCooking is my passionPassion for learning🌟
மேலும் படிக்க

Similar Recipes