கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15 எலுமிச்சை
  2. 30 பூண்டு
  3. 10 -13 பச்சை மிளகாய்
  4. சின்ன துண்டு இஞ்சி
  5. 4 காய்ந்த மிளகாய்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கடுகு
  8. 1/4கப் வினிகர்
  9. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  10. 1/4டீஸ்பூன் வெந்தயப்பொடி
  11. 1/2கப் சூடு தண்ணிர்
  12. கொஞ்சம் மஞ்சள்தூள்
  13. 1 டேபிள் ஸ்பூன் சக்கரை
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 எலிமிச்சையை 8 துண்டுகளாக வெட்டவும்

  2. 2

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி
    அதில் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தனி தனியாக பொரித்து எடுக்கவும்

  3. 3

    அதே எண்ணெயில் கடுகு சேர்த்து அது வெடித்ததும் பொரித்த பொருள்களை போட்டு வதக்கவும்

  4. 4

    அத்துடன் வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்

  5. 5

    பின் எலிமிச்சையை சேர்த்து வதக்கவும்

  6. 6

    அத்துடன் வினிகர், சூடு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  7. 7

    அதில் உப்பு மற்றும் சக்கரை சேர்க்கவும்

  8. 8

    அதான் சாறு சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்

  9. 9

    நாற்றாக ஆறவிட்டு கண்ணாடி ஜாடிக்கு மாற்றவும்

  10. 10

    ஊறுகாய் ரெடி

  11. 11

    குறிப்பு :
    இந்த ஊறுகாய் உடனே பயன்படுத்த முடியாது

    15 நாட்கள் கழித்து பயன்படுத்தவும்

    சாறு இன்னும் தேவைப்பட்டால் சூடு தண்ணீர் ஆறவைத்து சேர்த்துக்கொள்ளலாம்

    புளிப்பு தேவைப்பட்டால் வினிகரை சூடுபண்ணி ஆறவைத்து சேர்த்துக்கொள்ளலாம்

    காரம் தேவைப்பட்டால் பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் ஐ பொரித்து சேர்த்துக்கொள்ளலாம்

    உப்பு சேர்க்கவேணுமானால் சுடவச்சு ஆறிய தண்ணிரில் உப்பு கலந்து சேர்த்து கொள்ளலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes