கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)

#nutrient3
கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை.
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3
கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை ஆய்ந்து சுத்தமாக அலசி தண்ணீர் வடித்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தையும் பூண்டையும் தோலுரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 4 வரமிளகாயை வறுத்துக் கொள்ளவும். வரமிளகாயை எடுத்து தனியாக வைத்துவிட்டு, அதே எண்ணெயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை லேசாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
இப்போது பூண்டு வெங்காயத்துடன் கீரையை சேர்த்து பிரட்டி விடவும்.சூடு ஏறியவுடன் லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அதனுடனே கோலி குண்டு அளவு புளியை சேர்த்து வேகவிடவும்.கீரை வெந்தவுடன் ஆற விடவும்.
- 3
கீரை ஆறியவுடன் அதில் வறுத்த 4 மிளகாயை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளித்து கீரையில் சேர்க்கவும்.களிப்பில் தங்களுக்கு தேவை என்றால் சீரகம் மற்றும் வரக்கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரை மசியல் தயார். சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)
#jan2விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். Nalini Shanmugam -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
பருப்பு கீரை மசியல்
#nutritionபருப்பு கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் வேர்க்குரு கட்டி வருவதை தடுக்கும்.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஒமேகா 3 விட்டமின் டி இருப்பதால் இரத்த கொதிப்பு வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம். Priyanga Yogesh -
சிறு கீரை பால் கடையல்
#immunity #bookபொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
மணத்தக்காளிக் கீரை தேங்காய்ப் பால் குழம்பு (manathakkaali keerai thenkaai paal kulambu in tamil)
#nutrient3 Natchiyar Sivasailam -
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
#jan2கீரையில் அதிக நார்ச் சத்துகள் தாது உப்புகள் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக கோவை இலை கீரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும் சத்துக்கள் நிறைந்தவை.உடல் எடை குறைய விரும்புபவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதால் தாய்மார்கள் இந்தக் கீரை எடுத்து கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வல்லாரைக் கீரை சாதம்
#magazine6 #nutritionபொதுவாக எல்லா கீரை வகைகளும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. வல்லாரைக்கீரை நினைவு ஆற்றலுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை மறக்காமல் இருக்க இந்த வல்லாரைக்கீரை செய்து கொடுப்பார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் எல்லாம் கீரைவகைகள் காய்கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை அதற்கு பதில் பேக்கரி ஐட்டம் இன்ஸ்டன்ட் ஐட்டம் பீசா பர்கர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் இதுபோல் நெய் வாசத்துடன் சுவையாக செய்து கொடுத்தால் கீரையை சுவைத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது நினைவாற்றலுக்கு மிக மிக நல்லது.நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும். Meena Ramesh -
கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)
# GA4 # Week 16 # (Spinach Soup) இந்த கொரோனா காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை. Revathi -
ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. அறைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #nutrient3 Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil
More Recipes
கமெண்ட்