எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200கிராம் ராகி மாவு
  2. 1/2கப் உருகிய முருங்கை கீரை
  3. 1/2கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. 1/4கப் முட்டை கோஸ் துருவல்
  5. 1/4கப் கேரட் துருவல்
  6. 1/4கப் பீட்ரூட் துருவல்
  7. 6பச்சை மிளகாய்
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. தேவையான அளவுஉப்பு
  10. 8டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவுடன் உப்பு நறுக்கிய வெங்காயம் கேரட் துருவல் பீட்ரூட் துருவல் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் அலசி உருகிய முருங்கை கீரை சேர்த்து சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி பின் சிறிது தயிர் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்

  3. 3

    பின் பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை எடுத்து கைகளில் சிறிது எண்ணெய் தடவி சற்று மெலிதாக தட்டவும்

  4. 4

    பின் சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி திருப்பி போட்டு மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான ராகி முருங்கை கீரை அடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes