Mango Phirni (Mango phirni recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1.5கப் மாம்பழ விழுது
  2. 3 கப் பால்
  3. 1.5 டேபிள் ஸ்பூன் பாஸ்மதி அரிசி
  4. 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  5. 1 பின்ச் குங்குமப்பூ
  6. 1 டேபிள்ஸ்பூன் பொடித்த முந்திரி பாதாம்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  2. 2

    குங்குமப்பூவை ஒரு டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்.

  3. 3

    அகலமான கடாயில் 3 கப் பாலை மிதமான தீயில் காய வைக்கவும்.பால் கொதிக்க ஆரம்பித்ததும் பொடித்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும். அரிசி நன்கு வேகும் வரை கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்

  4. 4

    அரிசி நன்கு வெந்து சுருண்டு வரும் பொழுது பாலில் கரைத்த குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து க்ரீமி பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்து வேறு ஒரு பாத்திரத்தில் உடனே மாற்றி ஆறவிடவும்.இப்போது plain phirni ரெடி.

  5. 5

    நன்கு ஆறிய பின் அரைத்த மாம்பழ விழுதில் முக்கால் பாகத்தை சேர்த்து கலந்து விடவும்.இதை இப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென பரிமாறலாம். கடைசியில் பொடித்த முந்திரி பாதாமை தூவி அலங்கரிக்கவும்.

  6. 6

    எனக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும். அதனால் மேலும் சிறிது மாம்பலம் சேர்த்து லேயர் வடிவத்தில் செய்துள்ளேன்.

  7. 7

    2 கிண்ணத்தில், 2 டேபிள்ஸ்பூன் மாம்பழம் கலந்த phirni ஐ ஊற்றி அதன்மேல் மாம்பழ விழுது ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றவும். இதேபோல் கிண்ணம் முழுவதும் லேயராக நிரப்பவும்.

  8. 8

    ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து ஜில்லென பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Similar Recipes