பாதாம் ஷீர் குர்மா (Badam sheer kurma recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பாதாம் ஷீர் குர்மா (Badam sheer kurma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
9 பரிமாறுவது
  1. 1லிட்டர் பால்
  2. 200கிராம் சேமியா
  3. 1/4கப் பாதாம் பொடி
  4. 1/3கப் பால் பவுடர்
  5. 1_1/2 கப் சர்க்கரை
  6. 8டேபிள்ஸ்பூன் நெய்
  7. 15முந்திரி
  8. 15திராட்சை
  9. 25பாதாம்
  10. 2ஸ்பூன் சாரப்பருப்பு
  11. 2ஸ்பூன் வெள்ளரி விதை
  12. 2ஸ்பூன் ட்டூட்டி ப்ரூட்டி
  13. 8பேரிச்சம் பழம்
  14. 8ஏலக்காய்
  15. 1/4ஸ்பூன் ரோஸ் எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்

  2. 2

    பாதாமை கொதிக்கும் நீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிட்டு தோல் உரித்து வைக்கவும்

  3. 3

    பாதாம் பேரிச்சை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும் வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் பாதாம் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்

  4. 4

    பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை பேரிச்சை சாரப்பருப்பு வெள்ளரி விதை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்

  5. 5

    பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து கோல்டன் கலரில் வறுத்து எடுக்கவும்

  6. 6

    பின் கொதிக்கும் பாலில் சேர்த்து வேகவிடவும்

  7. 7

    சேமியா வெந்ததும் சிறிது ஆறிய பாலில் பால் பவுடர் மற்றும் பாதாம் பொடியை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து வெந்து கொண்டிருக்கும் சேமியாவில் ஊற்றி நன்கு கிளறவும்

  8. 8

    பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும் எல்லாம் சேர்ந்து திக்காக கொதித்ததும் வறுத்த (சிறிது நட்ஸ்ஐ தனியாக எடுத்து கொண்டு மீதமுள்ள நட்ஸ்ஐ) நட்ஸ்ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் க்ரீம் பதத்தில் திக்காக வந்ததும் இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும்

  10. 10

    பின் மேல் சிறிது முந்திரி வெள்ளரி விதை சாரப்பருப்பு ஐ பரவலாக போடவும்

  11. 11

    பின் சிறிது பேரிச்சையை பரவலாக போடவும்

  12. 12

    இறுதியாக வறுத்த பாதாம் மற்றும் ட்டூட்டி ப்ரூட்டி ஐ போடவும்

  13. 13

    பின் ரோஸ் இதழை தூவி பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes