வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)

ARP. Doss
ARP. Doss @cook_21334547

நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 மினிட்ஸ்
100 கிராம்ஐந்து நபர்களுக்கு
  1. 300 கிராம் முட்டைகோஸ்
  2. 1 டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  3. 1 டீஸ்பூன்மல்லித்தூள்
  4. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டீஸ்பூன் சோம்புத் தூள்
  6. 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சத்தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 டீஸ்பூன் மைதா
  11. 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் பவுடர்
  12. 2 டீஸ்பூன் கெட்டித்தயிர்
  13. எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப
  14. தண்ணீர் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 மினிட்ஸ்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் துருவி வைத்திருக்கும் கோஸ் சேர்த்து விடவும்.

  2. 2

    அதன்மேல் ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன் சோம்பு தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு ஒரு டீஸ்பூன் மைதா 2 டீஸ்பூன் கன்ஃபிளர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு கலந்த பிறகு அதில் இரண்டு மேஜைக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    இப்போது அதில் தண்ணீர் சிறிதளவு தெளித்து நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    அதை 15 நிமிடம் அப்படியே ஊற விடவும். நீரை அதிகம் சேர்க்கக்கூடாது இந்த ரெசிபிக்கு. ஏனென்றால் முட்டைகோஸில் நீர் சத்து இருக்கிறது அதனால் ஊறுகின்ற கையிலேயே அது நீர் விட ஆரம்பிக்கும்.அதனால் பார்த்து தண்ணீரை லைட்டாக தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து உருண்டைகளாக வைக்கவும். அடுப்பில் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடவும்.

  7. 7

    எண்ணை காய்ந்த பிறகு நம் உருட்டி வைத்திருக்கும் கோலா உருண்டை அதில் போடவும். இப்பொழுது மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் பொரித்தெடுக்கவும் நன்கு பொன்னிறமான உடன் எடுத்து விடவும்.

  8. 8

    இப்பொழுது சுவையான சூடாக வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை தயாராகிவிட்டது.மிகவும் சுலபமானது மற்றும் சுவையான இந்த ரெசிபியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் நீங்கள் சட்னி வைத்து கூட தொட்டு சாப்பிடலாம் ரொம்பவே சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes