சுண்டக்காய் கலவை சாதம் (Sundakkaai kalavai saatham recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

சுண்டக்காய் கலவை சாதம் (Sundakkaai kalavai saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. உதிரியாகவேகவைத்த சாதம்
  2. 2 டேபிள் ஸ்பூன் சுண்ட காய்வத்தல் காய்
  3. 5 மிளகாய் வத்தல்(காரம் தேவைக்கேற்ப)
  4. ஒரு டீஸ்பூன்மல்லி
  5. 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை
  6. அரை டீஸ்பூன் மிளகு, சீரகம், மஞ்சள் தூள்
  7. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு தேவைக்கேற்ப
  8. தாளிப்பதற்கு
  9. கடுகு வேர்க்கடலை, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சுண்டைக்காயை வறுத்து எடுத்துக்கவும்

  2. 2

    அதே வாணலியில் எடுத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் வத்தல், மற்றும் எல்லா பருப்புகளையும் வறுக்கவும்

  3. 3

    மிளகு, ஜீரகம் கடைசியாக வறுத்து, அடுப்பிலிருந்து வாணலியை கீழே இறக்கி வைக்கவும்.

  4. 4

    அதுக்கப்புறம் அதில பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து நல்லா ஆற விடவும்.

  5. 5

    நல்லா ஆறினதை மிக்ஸில் போட்டு கரகரப்பாக பொடி பண்ணிக்கவும்

  6. 6

    இதை ஆறவைத்திருக்கும் சத்திலே போட்டு உப்பு போட்டுகிளறவும். கடைசியாக கடுகு, வேர்க்கடலை கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மேலே ஒரு டேப்ளேஸ்பூன் எண்ணெய் விடவும்.

  7. 7

    சுவையான கசப்பில்லாத சுண்டைக்காய் சாதம் ரெடி அப்பளம்,வடாமுடன் சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes