சுண்டக்காய்வத்தல் குழம்பு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கைப்பிடி சுண்டைக்காய் வத்தல்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 எலுமிச்சை அளவு புளி
  5. 11/2 ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  7. சிட்டிகை மஞ்சள் தூள்
  8. 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
  9. கறிவேப்பிலை, உப்பு
  10. தாளிக்க
  11. 1 குழி கரண்டி நல்லெண்ணெய்
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. 1 வர மிளகாய்
  14. 1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சுண்டக்காய் வத்தலை சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள் சாம்பார் பொடி கொத்தமல்லித் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்த புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.

  3. 3

    பச்சை வாசனை போன பின் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து வறுத்த சுண்டைக்காய் அளவும் அதில் சேர்த்து ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க சுண்டவத்தல் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes