கார காளான் கிரேவி (spicy mushoom gravy)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கார காளான் கிரேவி (spicy mushoom gravy)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4பேர்
  1. 200 கிராம் காளான்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1டீஸ்பூன் தனியா தூள்
  6. 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 டீஸ்பூன் காரம் மசாலா தூள்
  9. 1/2டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. மல்லி இலை
  12. 1டேபிள் ஸ்பூன் நெய் ஒரு எண்ணை
  13. ஒரு சிறிய துண்டு பட்டை
  14. 2 கிராம்பு
  15. 1/4 டீஸ்பூன் சோம்பு
  16. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    காளானை நன்கு கழுவி, நான்காக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் மற்றும் அரிசி மாவு கலந்து அதில் காளானை பத்து நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் காளான் வெள்ளையாக இருக்கும்.

  2. 2

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

  3. 3

    வண்ணலியில் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து, பொரிந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின்னர் நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து, மேலே கொடுத்துள்ள மசாலாப் பொடிகளை, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும்.

  5. 5

    பத்து நிமிடங்கள் வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.

  6. 6

    இப்போது ஹோட்டல் கிடைக்கும் சுவையான, கார சாரமான காளான் கிரேவி வீட்டிலேயே தயாரித்து சுவைக்கலாம்.

  7. 7

    இந்த கார காளான் கிரேவி சாதத்துடனும், சப்பாத்தி, ரோட்டி, நான், பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes