தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பீர்க்கங்காய்- 200கிராம்
  2. சின்ன வெங்காயம்-100 கிராம்
  3. தக்காளி- 5
  4. பச்சை மிளகாய்-2
  5. வர மிளகாய்-2
  6. மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
  7. கடுகு அரை- டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் சின்ன வெங்காயம் இரண்டாக நறுக்கியது, பீர்க்கங்காய் சிறிய துண்டுகளாக நறுக்கியது, தக்காளி பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வதக்கிய பின் அதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு,தண்ணீர் கால் டம்ளர்,சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

  3. 3

    வேகவைத்த பீர்க்கங்காயை மத்து வைத்து நன்றாகக் கடையவும். கடைந்த பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்துகொட்டிகொத்துமல்லி இலை தூவிபரிமாறவும்.இப்பொழுதுசுவையான பீர்க்கங்காய்சட்னி ரெடி.இது தோசை,இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes