எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 5 தோசை
  2. 1முட்டை
  3. தேவையானஅளவு சிக்கன் குழம்பு துண்டுகள்
  4. 1 வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 1 பச்சை மிளகாய்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/2 ஸ்பூன்சீரகத்தூள்
  12. 1ஸ்பூன் மிளகு தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 1ஸ்பூன் சீரகம்
  15. 1மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தோசையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் குழம்பு துண்டுகளை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி விடவும்.

  3. 3

    பிறகு மிளகாய்த்தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி விடவும். முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் தோசை துண்டுகளை இதில் சேர்த்து கலந்து விட்டு ஒரு டம்ளர் வைத்து நன்கு கைகளால் கொத்தி விடவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சூப்பரான சிக்கன் கொத்து தோசை தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes