சாமை அரிசி இனிப்பு  புட்டு #breakfast

ARP. Doss
ARP. Doss @cook_21334547

நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம்.

சாமை அரிசி இனிப்பு  புட்டு #breakfast

நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5005நபர்களுக்கு
  1. 500 கிராம் சாமை அரிசி மாவு
  2. 50 கிராம் வறுத்த வேர்க்கடலை
  3. 50 கிராம் பொட்டுக்கடலை
  4. 200 கிராம் வெல்லம்
  5. 1 தேங்காய்
  6. 50 கிராம் நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உங்களிடம் சாமை அரிசி மாவு ரெடி மேடாக கிடைத்தால் அதை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் கடையில் சாமை அரிசி வாங்கி அதை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  2. 2

    இப்பொழுது புட்டு செய்வதற்கு சாமை அரிசியை தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசைந்து வைத்து அதை ஒரு வெள்ளைத்துணியில் வைக்க வேண்டும்.

  3. 3

    நீங்கள் இட்லி பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் முதலிலேயே தண்ணீர் வைத்து ப்ரீ ஹிட் செய்து வைத்திருக்க வேண்டும். குக்கர் ஆக இருந்தால் அது தேவையில்லை.

  4. 4

    இப்பொழுது பிசைந்து வைத்த மாவை அந்த துணியுடன் சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். குக்கரில் செய்வதாக இருந்தால் மூன்று விசிலில் எடுத்துவிடவும்.

  5. 5

    எடுத்து நன்கு ஆறவிடவும். அதற்கிடையில் மிக்சி ஜாரில் 50 கிராம் பொட்டுக்கடலை 50 கிராம் வேர்க்கடலை சேர்த்து நன்றாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயையும் நன்கு துருவி வைத்துக் கொள்ள வேண்டும். நெய் உருக்கி 50 கிராம் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்பொழுது இந்த அனைத்தையும் ஆற வைத்திருக்கும் பொட்டில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வெதுவெதுப்பான சூட்டில் கலந்து வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    இப்போது சுவையான மற்றும் ஹெல்தியான காலை உணவு தயாராகி விட்டது சாமை அரிசி இனிப்பு புட்டு உடலுக்கு மிகவும் நல்லது மட்டும் சிறுதானியத்தில் இருக்கிற பைபர் விட்டமின் அயன் போன்ற அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கும் ஆவியில் வேக வைத்த பொருள் என்பதால் இதனால் எந்தவித ஆபத்தும் கிடையாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes