எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேருக்கு
  1. 1 தக்காளி
  2. 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  3. 1/2 கப் கெட்டியான பருப்பு தண்ணீர்
  4. 1 துண்டு வெல்லம்
  5. தாளிக்க கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள், ஒரு வரமிளகாய், 5 பல் பூண்டு
  6. ரசப்பொடி அரைப்பதற்கு
  7. 1 ஸ்பூன் கொத்தமல்லி
  8. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 1/2 ஸ்பூன் சீரகம்
  10. 1/4 ஸ்பூன் மிளகு
  11. 2 வர மிளகாய்
  12. 1 1/2 ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கொத்தமல்லி, கடலைப்பருப்பு, சீரகம்,மிளகு, வர மிளகாய் இவற்றை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஒன்றரை ஸ்பூன் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி தயார்.

  3. 3

    வேக வைத்த தக்காளியை நன்கு மசித்து கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்த மசித்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளி கரைசலை சேர்க்கவும்.

  4. 4

    சிறிது சூடேறியதும் பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.

  5. 5

    தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்துள்ள ரசப்பொடி சேர்க்கவும். கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து ரசம் நுரை கட்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம்,பூண்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

  6. 6

    வெல்லம் சேர்த்து பரிமாறலாம். சுவையான ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes