மாங்காய் வற்றல் சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
மாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 10 காய்ந்த மாங்காய் வற்றல்
  2. நெல்லிக்காய் அளவுபுளி
  3. தேவையானஅளவு உப்பு
  4. 2 தக்காளி
  5. 10சின்ன வெங்காயம்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1/2கப் துவரம் பருப்பு
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2டீஸ்பூன் நல்லெண்ணெய்
  10. 1டீஸ்பூன் கடுகு
  11. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  12. வறுத்து அரைத்து கொள்ள
  13. 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  14. 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  15. 8மிளகாய் வற்றல்
  16. 1டீஸ்பூன் பெருங்காயம்
  17. 1/4கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மாங்காய் கிடைக்கும் சமயங்களில் மாங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இதுவே மாவற்றல் ஆகும். தேவையான போது உபயோகித்து கொள்ளவும்

  2. 2

    மா வத்தலை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    துவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்

  5. 5

    அதை தேங்காய் துருவல், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  6. 6

    கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி,மாவற்றல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

  7. 7

    பின் அதில் புளிக் கரைசல் சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும்

  8. 8

    பின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்

  9. 9

    கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும். வித்தியாசமான மாவற்றல் சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes