தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. 1ஸ்பூன் சர்க்கரை
  3. 1/4கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  4. 1ஸ்பூன் ஈஸ்ட்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1ஸ்பூன் ஓரிகனோ
  7. ஸ்டவ் செய்ய :
  8. 1 வெங்காயம்
  9. 1 தக்காளி
  10. 1 குடைமிளகாய்
  11. 1/4கப் ஸ்வீட் கார்ன்
  12. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  14. தேவையானஅளவு ஓரிகனோ
  15. 2ஸ்பூன் டோமேட்டோ கெட்ச்அப்
  16. தேவையானஅளவு வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சர்க்கரை, ஈஸ்ட் கலந்து 15 நிமிடம் அப்படியே வைக்கவும்.மற்றொரு பவுலில் மைதா மாவு, உப்பு, ஓரிகனோ சிறிதளவு சேர்த்து ஈஸ்ட் ஆக்டிவேட் ஆன தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    இந்த மாவின் மேல் எண்ணெய் தடவி மூடி வைத்து 1மணி நேரம் அப்படியே வைத்து விடவும். மாவு இரண்டு மடங்கு உப்பி வந்து இருக்கும்.அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஸ்டவ் செய்ய : வானலில் வெண்ணெய் விட்டு சிறிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் இவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், ஓரிகனோ சேர்த்து வதக்கவும்.கடைசியாக டோமேட்டோ கெட்ச்அப் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். வெஜிடபிள் ஸ்டவ் தயார்.

  5. 5

    மைதா மாவு ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்ட வடிவில் தேய்த்து அதன் மேல் வெண்ணெய் தடவி அதன் ஓரங்களை மூன்று பக்கமும் சிறிதளவு மடித்து விடவும்.

  6. 6

    பின்னர் அதன் நடுவில் வெஜிடபிள் ஸ்டவ் சிறிதளவு வைத்து மூன்று ஓரங்களில் லேசாக தண்ணீர் தொட்டு தடவி ஓரங்களை மத்தியில் ஒன்று சேர்ந்து மடித்து கொள்ளவும்.பிறகு இதன் மேல் வெண்ணெய் தடவி ஓரிகனோ சிறிதளவு தூவி கொள்ளவும்.

  7. 7

    அடுப்பில் கடாய் வைத்து அதனுள் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் ப்ரீஹூட் செய்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் செய்ததை வைத்து கொள்ளவும்.

  8. 8

    கடாய் சூடானதும் அதனுள் இந்த தட்டை வைத்து மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சூப்பரான வெஜ் ஜிங்கி பார்சல் தயார். நன்றி

  9. 9

    Cookwithfriends kavithachandran & renukabala

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes