பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்

#sambarrasam
கருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் துவரம் பருப்பை கழுவி 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும் அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும். பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் வட்ட வடிவில் அரிந்து போட்டு வைக்கவும். பத்து சிறிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளவும். எலுமிச்சைப்பழ அளவு புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்து 6 அல்லது 7 சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பிரஸர் பான்,அல்லது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயத் தூள் வரமிளகாய் கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பாவக்காய் சேர்த்து வதக்கவும். பின்பு அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கரைத்து வைத்த புளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சாம்பார் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்த புளி தண்ணீரில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கிய காய்களையும் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொள்ளவும். ஒரு கொதி விடவும். வேக வைத்த கொண்டை கடலையை சேர்த்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
- 4
சுவையான பாகற்காய் கொண்டைக்கடலை சாம்பார் தயார் சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். வடகம் அப்பளம் போன்றவை தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இந்த குழம்பிற்கு ப புளி கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
-
-
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
-
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
-
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)