ட்விஸ்ட் ஸ்வீட்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#leftover
மீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 200 கிராம் அரிசி சாதம்
  2. 1/4 கப் மைதா
  3. 2 ஸ்பூன் ரவை
  4. 1/4 கப் டெசிகேடட் தேங்காய் பவுடர்
  5. 3 டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  6. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 6 டேபிள் ஸ்பூன் நெய்
  8. வனஸ்பதி அல்லது எண்ணெய் பொரிப்பதற்கு
  9. சர்க்கரை சிரப் செய்ய:
  10. 1/2 கப் சர்க்கரை
  11. 1/2 கப் தண்ணீர்
  12. 1/8 ஸ்பூன் ரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சாதத்தை சேர்த்து நிறம் மாறாமல் இரண்டு நிமிடம் வரை வறுக்கவும்

  2. 2

    பின் ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் மிகவும் நைசாக இல்லாமல் அரைக்கவும்

  3. 3

    பின் ரவை ஐ வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்

  4. 4

    பின் அரைத்த சாதத்துடன் பொடித்த ரவை, மைதா, தேங்காய் பவுடர், பொடித்த சர்க்கரை பவுடர்,ஏலத்தூள் சேர்த்து கலந்து மீதமுள்ள நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின் இருபது நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் பின் மீண்டும் சிறிது நன்கு பிசைந்து கொள்ளவும் கைகளில் ஒட்டாத பதத்தில் பிசைந்து கொள்ளவும் ஒட்டினால் சிறிதளவு மைதா மாவு (குறைந்தது 2 ஸ்பூன் வரை மட்டுமே) சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் பெருவிரல் கொண்டு அழுத்தினாள் பாதுஷா வடிவம் கிடைக்கும்

  7. 7

    பின் வனஸ்பதி ஐ உருக்கி மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும் கோல்டன் ப்ரவுன் வேண்டாம் வனஸ்பதி மிதமான சூட்டில் வைத்து பொரிப்பது முக்கியமானது

  8. 8

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து சற்று ஆறவிடவும்

  9. 9

    இளஞ் சூட்டில் இருக்கும் சர்க்கரை சிரப் ல் பொரித்த உருண்டையை போட்டு 20 நொடி மட்டுமே ஊறவிட்டு தட்டில் அடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes