தென்காசி சீரணி

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#leftover
தோசை மாவு மீந்து குறைவாக இருக்கும் போது அதனை மாற்றம் செய்து சீரணியாக செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

தென்காசி சீரணி

#leftover
தோசை மாவு மீந்து குறைவாக இருக்கும் போது அதனை மாற்றம் செய்து சீரணியாக செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தோசை மாவு-1\2கப்
  2. கோதுமை மாவு-2டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை-1\4கப்
  4. சிகப்பு ஃபுட் கலர்-1சிட்டிகை
  5. பேக்கிங் சோடா-1சிட்டிகை
  6. எண்ணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்சிங் பௌலில் தோசை மாவுடன் கோதுமை மாவு, சிகப்பு ஃபுட் கலர் எடுத்துக் கொள்ளவும். இதனை நன்கு கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்

  2. 2

    இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைத்து 10 நிமிடங்கள் தனியே ஊற வைக்கவும்

  3. 3

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் வைத்திருக்கவும்.

  4. 4

    ஒரு ஜிப்லாக் கவரை ஒரு கிண்ணத்தினுள் வைத்து அதனுள் கரைத்த கலவையை ஊற்றி அதனை ரப்பர் பேண்ட் போட்டு காட்டவும்

  5. 5

    அதன் நுனியில் சிறிது கத்தரித்து மாவு பிழிவதற்கு ஏற்றவாறு துளை போடவும்.

  6. 6

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சுற்றி சுற்றி பிழிந்து விடவும்

  7. 7

    அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு கிரிஸ்பியாக பொரித்து எடுத்து இரண்டு மூன்று துண்டுகளாகப் பிய்த்து சூடான சர்க்கரை பாகில் போடவும். 5 நிமிடங்கள் கழித்து சாப்பிடவும்

  8. 8

    மீதமான தோசை மாவில் சுவையான தென்காசி சீரணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes