ஜீப்ரா கேக்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 15 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. கோதுமை மாவு-1 1/2 கப்
  2. கரும்பு சர்க்கரை-1 1/4 கப்
  3. பேக்கிங் சோடா-1/2 டீஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  5. எண்ணெய்-1/4 கப்
  6. வெண்ணெய்- 50 கிராம்
  7. வெண்ணிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்
  8. காபி பவுடர்-2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி 15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. கோதுமை மாவு மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்...

  2. 2

    கலந்த கலவையை இரு பாகமாக பிரித்து வைக்கவும்.. ஒரு கலவையில் எடுத்து வைத்துள்ள காபி பவுடரை சிறிது தண்ணீரில் கலந்து கேக் மாவு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த இரு கவலையையும் ஒன்று பின் ஒன்றாக சேர்த்து (ஒரு கரண்டி காபி கலவை ஒரு கரண்டி நார்மல் கலவை) படத்தில் உள்ளது போல் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இதில் டூத் பிக் வைத்து பூ போன்ற வடிவில் மாவை இழுத்து விடவும்.பின்னர் குக்கரை 10 நிமிடங்கள் பீரி ஹீட் செய்து விட்டு பின் கேக் பாத்திரத்தை வைத்து 40-50 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.. பின்னர் ஒரு கத்தி/மரக் குச்சி வைத்து குத்திப் பார்க்கையில் மாவு ஒட்டாமல் வரும்போது கேக் நன்றாக வெந்து விடும்.. வெளியே எடுத்து வைக்கவும்..

  4. 4

    நன்கு ஆறியதும் கேக்கை தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.. சுவையான ஆரோக்கியமான ஜீப்ரா கேக் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes