எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் மைதா
  3. 2 ஸ்பூன் எண்ணெய்
  4. உப்பு தேவையான அளவு
  5. 3/4 கப்+3 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பால்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு மற்றும் மைதா மாவை எந்த கப்பில் அளக்கிறோமோ அதிலே பாலை அளந்து கொள்ளவும்

  2. 2

    கோதுமை மாவு மற்றும் மைதா உப்பு ஆகியவற்றை சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  3. 3

    பின் வெதுவெதுப்பான பால் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் கூட எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    உள்ளங்கையால் பத்து நிமிடம் வரை அழுத்தி பிசைந்து கொள்ளவும் பின் அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  5. 5

    ஊறிய மாவை நன்கு அடித்து பிசைந்து சம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் பின் சிறிது வர மாவை தூவி நன்கு தேய்க்கவும்

  6. 6

    ரொமானியன் என்றாலே ✋ கர்ச்சீப் போன்று அதனால் நன்கு மெல்லியதாக தேய்க்கவும் கைகளில் எடுத்தால் கர்ச்சீப் துணி போன்று இருக்க வேண்டும்

  7. 7

    பின் தோசைக்கல்லை குப்புற திருப்பி சூடாக்கவும் உப்பு உடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும் பின் சூடான தோசைக்கல்லில் உப்பு கலந்த நீரை தெளித்து தேய்த்த மாவை போடவும்

  8. 8

    பின் 20 நொடி வரை வேகவிட்டு திருப்பி போட்டு 20 நொடி வரை வேகவிடவும்

  9. 9

    அவ்வப்போது கொப்பளித்து உப்பி கொண்டு வந்தால் சுத்தமான மஸ்லின் துணியால் அழுத்தி விடவும்

  10. 10

    பின் மீண்டும் 5 நொடி வரை இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்

  11. 11

    சூடாக இருக்கும் போதே கர்சிப் போல மடித்து கொள்ளவும்

  12. 12

    அதிக நேரம் வேக விட வேண்டாம் மிகவும் மெல்லியதாக இருப்பதால் மொறுமொறுப்பாக ஆகி விடும் ஒவ்வொரு முறையும் தவறாமல் உப்பு கலந்த நீரை தெளித்து பின் போடவும்

  13. 13

    சுடச் சுடச் ரொமாலியன் ரொட்டி ரெடி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes