கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#bake
குக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 150 கிராம் மைதா
  2. 150 கிராம் கருப்பட்டி
  3. 75 கிராம் வெண்ணெய்
  4. 2 முட்டை
  5. 1 1/2டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2டீ ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1/4டீ ஸ்பூன் உப்பு
  8. 1 1/2டீ ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  9. 50மிலி தண்ணீர்
  10. டாப்பிங் செய்ய
  11. 100 கிராம் கருப்பட்டி
  12. 1/4 கப் தண்ணீர்
  13. 50 கிராம் முந்திரி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்த்து கொள்ளவும்.

  2. 2

    மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து ரெண்டு முறை சலித்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    வெண்ணெயை நன்கு கிரீம் பதத்திற்கு அடித்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    முட்டையை நன்கு நுரைத்து வரும் வரை அடித்து கொள்ளவும்.

  5. 5

    அடித்த முட்டையுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    இப்போம் கருப்பட்டி பாகை பில்டரில் பில்டர் செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

  7. 7

    வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்த கொள்ளவும்.

  8. 8

    சலித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்

  9. 9

    குக்கரை காஸ்கெட்,வெயிட் போடாமல் மூடியை மூடி 10நிமிடம் முழு தீயில் வைத்து ப்ரீ ஹீட் பண்ணவும்.

  10. 10

    இப்போம் பேக்கிங் பேனில் பட்டர் பேப்பர் வைத்து கேக் மாவை ஊத்தவும்.

  11. 11

    பின் பேனை லைட்டாக தட்டி விடவும்(ஏர் பப்பிள்ஸ் போக தட்டி விடவும்).

  12. 12

    குக்கரில் வைத்து (காஸ்கெட் போடாமல்) மூடியை மூடி வெயிட் போடாமல் மீதமான தீயில் 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  13. 13

    கேக் வெந்து விட்டதா என்று ஒரு சின்ன குச்சி வைத்து குத்தி பார்க்கவும்

  14. 14

    கேக் டாப்பிங் செய்ய கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும்.

  15. 15

    கேக்கை தலை கீழாக மாத்தினால் மேலே சமமாக இருக்கும் பின் டாப்பிங் செய்ய வேண்டும்பின் பில்டர் செய்து கேக் மேலே ஊத்தவும்.
    முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

  16. 16

    சுவையான குக்கர் கருப்பட்டி கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes