கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1hrs
2 பரிமாறுவது
  1. 1கிலோ இட்லி அரிசி
  2. 5பங்கு தண்ணீர்
  3. 1டம்ளர் ஜவ்வரிசி
  4. 20பச்சை மிளகாய்
  5. 1கைப்பிடி கல்உப்பு
  6. 2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  7. 1/2டீஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

1hrs
  1. 1

    1 கிலோ இட்லி அரிசியை கழுவி ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைத்து வைக்கவும். 1 டம்ளர் ஜவ்வரிசியை இரவு ஊற வைத்து அதை மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து கூழ் காய்ச்சும் பொழுது சேர்க்கவும். ஒரு பங்கு அரிசி மாவுக்கு ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து கூழ் காய்ச்சவும். 20 பச்சை மிளகாய் 1 கைப்பிடி கல் உப்பு இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைத்து மாவு முக்கால் பங்கு வெந்தவுடன் பச்சை மிளகாயை அரைத்ததை சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கலக்கி இறக்கவும்.

  2. 2

    மாசி பங்குனி மாதம் அடிக்கும் வெயிலில் தூய்மையான துணியை தரையில் விரித்து வடகம் கிள்ளி வைக்கவும். மூன்று முதல் ஐந்து நாட்கள் வெயிலில் காய வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

  3. 3

    ஐந்து நாட்கள் கழித்து கடாயில் எண்ணெயை காய வைத்து வடகத்தை பொரித்து எடுத்து பரிமாறலாம். சுவையான கூழ் வடகம் ரெடி.😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes