கண்டா போஹா (Kanda Poha recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#india2020
இந்த உணவு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்கள் சாப்பிடுவது ஆகும். வெங்காயம் என்பதற்கு மராட்டிய மொழியில் கண்டா (kanda) என்பதாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2கப் அவல்
  2. 2மேசைக்கரண்டி வேர்க்கடலை
  3. 2 வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. 1/2ஸ்பூன் உப்பு
  8. 1 ஸ்பூன் சர்க்கரை
  9. 1/2 எலுமிச்சை பழம்
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 1ஸ்பூன் சீரகம்
  12. 1/4கப் மிக்ஸர்
  13. 2மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் அவல் எடுத்து கொண்டு தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி 15 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடவும்.பிறகு இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அதே எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.

  3. 3

    பின்னர் இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இதில் அவல் சேர்த்து நன்கு கலந்து விட்டு வறுத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு 2 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.

  5. 5

    கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.பரிமாறும் போது லேசாக மிக்ஸர் தூவி சூடாக பரிமாறவும்.சூப்பரான மஹாராஷ்டிரா ஸ்டைல் கண்டா போஹா தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes