சீறாளம்(Seeralam) (Seeralam recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#mom
#india2020
இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும்.மிகவும் ஆரோக்கியமானது.

சீறாளம்(Seeralam) (Seeralam recipe in tamil)

#mom
#india2020
இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும்.மிகவும் ஆரோக்கியமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35  நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4டம்ளர் பச்சரிசி
  2. 1/4டம்ளர் துவரம்பருப்பு
  3. 1/4டம்ளர் பச்சை பயறு
  4. 1/4டம்ளர் கடலைப்பருப்பு
  5. 1//2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 3/4ஸ்பூன் கரமசாலா
  7. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 1 வெங்காயம்
  9. 1 பச்சை மிளகாய்
  10. 3ஸ்பூன் தேங்காய் துருவல்
  11. 3ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1ஸ்பூன் கடுகு
  14. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  15. 2ஸ்பூன் கடலைப்பருப்பு
  16. சிறிதளவுகறிவேப்பிலை
  17. 3ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35  நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் அரிசி, மற்றும் பருப்புகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மிக்ஸியில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதில் கரமசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைத்து எடுக்கலாம்.

  3. 3

    பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பேனில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி இந்த நறுக்கிய துண்டுகளை சேர்த்து லேசாக டோஸ்ட் செய்து எடுத்து அதை மீண்டும் சிறு துண்டுகளாக நறுக்கவும்.இது போன்று பேனில் டோஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

  4. 4

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் நறுக்கிய துண்டுகள், வேர்க்கடலை, தேங்காய் துருவல் சேர்த்துதேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைத்து எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான சீறாளம் தயார்.நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes