எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40mins
2 பரிமாறுவது
  1. 3/4கப் மைதா
  2. 1/4கப் வெண்ணெய்
  3. 1/4கப் ஐசிங் சுகர்
  4. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1பிஞ்ச் பேக்கிங் சோடா
  7. 2டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர்
  8. 2டீஸ்பூன் பால்
  9. சிறியஅளவு பட்டர் பேப்பர்

சமையல் குறிப்புகள்

40mins
  1. 1

    மைதா மாவு பொடித்த சர்க்கரை பேக்கிங் பவுடர் வெண்ணெய் எடுத்து வைக்கவும். 1/4 கப் வெண்ணெயுடன் 1/4 கப் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  2. 2

    1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1 பின்ச் பேக்கிங் சோடா, 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பீட் செய்யவும். முக்கால் கப் மைதா மாவை சலித்து எடுத்து வைக்கவும்.

  3. 3

    மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி பால் சிறிது சேர்த்து பிசைந்து விடவும். பிசைந்த மாவை இரண்டாக பிரித்து வைக்கவும். 2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து ஒரு பகுதி மாவில் பிசைந்து வைக்கவும்.

  4. 4

    ஒரு பகுதி கோகோ பவுடர் பிசைந்த மாவை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு சிறிய பட்டர் பேப்பரில் மாவை வைத்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்த்து விடவும்.

  5. 5

    ஹார்ட் ஷேப் வடிவத்தில் செய்து தண்ணீர் சிறிது தடவி ஒன்றுடன் ஒன்று அடுக்கி அதை ஃப்ரீசரில் 30 நிமிடம் வைக்கவும்.

  6. 6

    30 நிமிடம் கழித்து ஃப்ரீசரில் இருந்து எடுத்து மீதமிருக்கும் மாவை வெளிப்புறமாக வைத்து ரோல் செய்து கத்திக்கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி விடவும். கடாயில் உப்பு சேர்த்து ப்ரீ ஹிட் செய்யவும். நறுக்கி வைத்த குக்கீஸ்களை அதில் அடிக்கி பேக் செய்யவும்.

  7. 7

    மீதமிருக்கும் குகீஸ்களையும் பொன்னிறமாக பேக் செய்து எடுத்து வைக்கவும்.

  8. 8

    சுவையான சாக்லேட் குக்கீஸ் ரெடி.😍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes