சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1/4 கப் சாக்கோ பவுடர்
  3. 75 கிராம் வெண்ணெய்
  4. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  5. 2-3 டேபிள்ஸ்பூன் பால்
  6. சிறிதுஉப்பு
  7. க்ரீம் செய்ய
  8. 4 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  9. 2 டேபிள்ஸ்பூன் சாக்கோ பவுடர்
  10. 1/2 கப் சர்க்கரை தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் முதலில் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் (வெண்ணெய் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைக்கவும்) பிறகு பொடித்த சர்க்கரையை சலித்து சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    வெண்ணெயும் சர்க்கரையும் க்ரீம் போல் வரும் வரை நன்றாக கிளறவும் பிறகு சல்லடை வைத்து இதில் மைதா மாவு,கொக்கோ பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்

  3. 3

    இதனை கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இதில் முதலில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பிசையவும் மாவு மிருதுவாக இல்லை எனில் மற்றொரு ஸ்பூன் பால் சேர்த்து பிசையவும் (பாலை மெதுமெதுவாக சேர்க்கவும் அதிகமாக சேர்த்து விட்டால் மாவு தண்ணீர் போல் ஆகிவிடும்)

  4. 4

    பிசைந்த மாவை பட்டர் ஷீட் மேல் வைக்கவும் பிறகு அதன் மேல் மற்றொரு பட்டர் ஷீட் வைக்கவும்

  5. 5

    சப்பாத்தி கட்டை பட்டர் சீட் மேல் வைத்து மெதுவாக தேய்க்கவும் பிறகு படத்தில் காட்டியவாறு சதுரமாக வெட்டிக் கொள்ளவும்

  6. 6

    பிறகு படத்தில் காட்டியவாறு சரிசமமாக செவ்வக வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு குச்சி உதவி கொண்டு சிறு சிறு ஓடைகள் போட்டுக் கொள்ளவும் அதன் மேல் சிறிது சர்க்கரை தூவிவிடவும் மற்றொரு விதமாக நான் ஹார்டின் ஷேப்பைக் கொண்டு எடுத்துள்ளேன்

  7. 7

    ஒரு தட்டின் மேல் பட்டர் சீட்டை வைத்து சற்று இடைவெளிவிட்டு பிஸ்கட்களை வைக்கவும் பிறகு உப்பு கொட்டிய பாத்திரத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்

  8. 8

    பிஸ்கட் சற்று பெரிதாகி இருக்கும் தெரியவில்லை எனில் ஒரு ஸ்பூனில் உதவிகொண்டு பிஸ்கட்டை எடுத்து பார்க்கவும் பிஸ்கட் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம் முதலில் மெதுவாக தான் இருக்கும் ஆறிய பிறகு தான் வரும் மொறுமொறுவென வரும்

  9. 9

    க்ரீம் செய்ய முதலில் பாத்திரத்தில் மிருதுவான வெண்ணையை எடுத்துக்கொள்ளவும் பிறகு சர்க்கரை கோகோ பவுடரை சேர்த்துக் கொள்ளவும்

  10. 10

    பிறகு அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக கலந்து கிரீம் போல செய்து கொள்ளவும் பிறகு இந்த கிரீம் ஆறிய பிஸ்கட் மேல் வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைக்கவும் இதேபோல் எல்லா பிஸ்கட்களையும் செய்யவும்

  11. 11

    சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes