கிரில் சிக்கன் (Grill chicken recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

கிரில் சிக்கன் (Grill chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3/4கிலோ சிக்கன்
  2. 1/4கப் தயிர்
  3. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2ஸ்பூன் மல்லி தூள்
  8. 1ஸ்பூன் மிளகு தூள்
  9. 1/2ஸ்பூன் சாட் மசாலா
  10. 1ஸ்பூன் கரமசாலா
  11. 1ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  12. 1/2 எலுமிச்சை பழம்
  13. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மிளகு தூள், சாட் மசாலா, கரமசாலா, கஸ்தூரி மேத்தி இவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  2. 2

    சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து எடுத்து கத்தியால் லேசாக கீறி இந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு இதில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து கலந்து விடவும்.

  3. 3

    இந்த மசாலா கலந்த சிக்கனை குறைந்தது 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். முடிந்தால் ஒரு இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஓவனை மைக்ரோவேவ்+கிரில் மோடில் 2 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும். கிரில் ஸ்டான்டில் வெண்ணெய் லேசாக ப்ரஷ் செய்து கொள்ளவும். பிறகு சிக்கனை இதன் மேல் எடுத்து வைக்கவும்.

  5. 5

    ஓவனை மைக்ரோவேவ்+கிரில் மோடில் 20 நிமிடம் வைத்து பேக் செய்யவும்.இதில் 10 நிமிடம் ஆனதும் வெளியே எடுத்து எல்லா சிக்கனில் வெண்ணெய் படும் படி தடவி திருப்பி போட்டு ஓவனில் வைத்து விடவும்.

  6. 6

    பிறகு கிரில் மோடில் 20 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும். இதேபோல் 10 நிமிடம் பிறகு வெளியே எடுத்து வெண்ணெய் தடவி திருப்பி போட்டு ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

  7. 7

    சூப்பரான சுவையான கிரில் சிக்கன் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes