ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 120 கிராம்ராகி மாவு
  2. இனிப்பு புட்டு தேவையான பொருட்கள்:
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. 3 டேபூள் ஸ்பூன்நாட்டு சர்க்கரை
  5. 3 டேபூள் ஸ்பூன்தேங்காய் துருவல்
  6. காரம் புட்டு தேவையான பொருட்கள்:
  7. 1பெரிய வெங்காயம்
  8. 1பச்சை மிளகாயை
  9. 1காய்ந்த மிளகாய்
  10. உப்பு தேவையான அளவு
  11. 3 டேபூள் ஸ்பூன்தேங்காய் துருவல்
  12. 2 டீஸ்பூன்எண்ணெய்
  13. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு 1
  14. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலியில் ராகி மாவு கொட்டி அதை 5 நிமிடம் சூடு படுத்தி கொள்ளவும்.ஆரிய பிறகு அதில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து தெளித்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    மாவை பிடித்தால் பிடி மாவை போலவும் ஊதித்திவிட்டால் உதிரியாகவும் இருக்க வேண்டும்.

  3. 3

    ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதில் ராகி மாவை வைத்து சிறிது தண்ணீர் தெளித்து துணியை நான்கு புறமும் மடித்து இட்லி பானையை முடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்

  4. 4

    15 நிமிடம் பிறகு ராகி மாவு நன்றாக வெந்திருக்கும் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆரவைத்து கொள்ளவும்

  5. 5

    ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    பிறகு அதில் ஆரிய ராகி மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான கார் புட்டு ரெடி.

  7. 7

    ஆரிய ராகி மாவில் தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான இனிப்பு புட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes