ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

ரேஷன் அரிசியில் சாஃப்ட்டான இட்லி (Idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒன்றரை மணி நேரம்
  1. இரண்டு கிலோரேஷன் அரிசி
  2. 200 கிராம்வெள்ளை உளுந்து
  3. 2 ஸ்பூன்வெந்தயம்

சமையல் குறிப்புகள்

ஒன்றரை மணி நேரம்
  1. 1

    ரேஷன் அரிசியை அளந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை கழுவி பிறகு ஊற வைக்கவும்.

  2. 2

    ஏறக்குறைய எட்டு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.

  3. 3

    ஊறிய பிறகு மீண்டும் இரண்டு முறை கழுவி விடவும். பிறகு கிரைண்டரில் போட்டு கொரகொரவென்று அரைக்கவும். ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளலாம்.

  4. 4

    இதேபோல் உளுந்தையும் வெந்தயத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு இவற்றை அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

  6. 6

    இதை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  7. 7

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். புளித்திருக்கும் மாவை நன்றாக கலக்கி இட்லித்தட்டில் இட்லிகளாக வார்க்கவும்.

  8. 8

    அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

  9. 9

    சாஃப்டான வெள்ளையான ரேஷன் அரிசியில் செய்த இட்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes