பேக்கரி ஸ்டைல் கிரீம் பட்டர்  பன் (Cream butter bun recipe in tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 1/2 hrs
5 பரிமாறுவது
  1. 1/4கிலோ மைதா
  2. 1 முட்டை
  3. 25 கிராம் வெண்ணெய்
  4. 50 கிராம் சீனி
  5. 120 மிலி பால்
  6. 1டீ ஸ்பூன் ஈஸ்ட் +1 டீ ஸ்பூன் சீனி
  7. உப்பு தேவையான அளவு
  8. கிரீம் செய்ய
  9. 30 கிராம் வெண்ணை
  10. 70 கிராம் சீனி
  11. 1டே ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

2 1/2 hrs
  1. 1

    மிதமான சூடு பாலில் ஈஸ்ட் மற்றும் சீனி சேர்த்து கலந்து ஒரு 15நிமிடம் ஈஸ்ட் நொதித்து வர வைக்கவும்.

  2. 2

    ஈஸ்ட் நன்கு நொதித்து இப்படி இருக்கும்.

  3. 3

    இப்போம் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு

  4. 4

    அத்துடன் வெண்ணெய்,சீனி சேர்க்கவும்.

  5. 5

    கூடவே முட்டை மற்றும் ஈஸ்ட் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  6. 6

    பின் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து மேலே எண்ணெய் தடவி ஒரு ஈரமான துணி போட்டு 1- 1/2 மணி நேரம் மாவு ரெண்டு மடங்காகும் வரை மூடி வைக்கவும்.

  7. 7

    பின் அதை எடுத்து குட்டி குட்டி உருண்டையாக உருட்டி மறுபடியும் ஒரு ஈரமான துணி போட்டு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

  8. 8

    கடாயில் எண்ணெய் ஊத்தி சூடு ஆனதும் ஒரு ஒரு பன் போட்டு மீதமான தீயில் பொரித்து எடுக்கவும்

  9. 9

    ஒரு பக்கம் வெந்ததும் மாத்தி போடவும்.

  10. 10

    பின் எடுத்து ஆறா விடவும்.

  11. 11

    பட்டர் கிரீம் செய்ய ஓரு பாத்திரத்தில் வெண்ணை பொடித்த சீனி பால் சேர்க்கவும்

  12. 12

    நன்கு கிரீமாக கலந்து கொள்ளவும்.

  13. 13

    பன் நடுவில் வெட்டி கிரீம் தடவி பரிமாறவும்.

  14. 14

    பேக்கரி ஸ்டைல் கிரீம் பட்டர் பன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes