முட்டை காய்கறி குருமா (Muttai kaaikari kuruma recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2முட்டை
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1கேரட்
  5. 1/2குடைமிளகாய்
  6. 1உருளைக்கிழங்கு
  7. 15பீன்ஸ்
  8. 11/2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  9. 2பச்சைமிளகாய்
  10. கறிவேப்பிலை
  11. 3ஸ்பூன்நல்லெண்ணெய்
  12. 2பட்டை
  13. பூ
  14. 1ஸ்பூனாசோம்பு
  15. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  16. 2ஸ்பூன்மல்லித்தூள்
  17. 1/2ஸ்பூன்கரம்மசாலாதூள்
  18. உப்பு
  19. அரைக்க:-
  20. 1கப்துருவியதேங்காய்
  21. 1வெங்காயம்
  22. 1ஸ்பூன்சோம்பு
  23. 2கிராம்பு
  24. 10முந்திரி பருப்பு
  25. 1ஸ்பூன்சீரகம்
  26. தண்ணீர்தேவையான

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முட்டையை வேக வைக்கவும்... பின்னர் தேங்காய் விழுதை அரைத்து கொள்ளவும்...

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை,பூ,சோம்பு சேர்த்து நன்கு வதக்கய பின் பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்....

  3. 3

    பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்... பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.... பின்னர் கேரட்,உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பீன்ஸ்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்....

  4. 4

    பிறகு மிளகாய்தூள்,மல்லி தூள்,கரம்மசாலாதூள், சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.... பிறகு தேங்காய் விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்....

  5. 5

    பின்னர் இதனுடன் தேவையான தண்ணீரை சேர்த்து நன்கு காய்கறிகளை வேக வைக்கவும்.... கொதி வந்த பின் வேகவைத்த முட்டை,கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.... சுவையான ஆரோக்கியமான முட்டை காய்கறி குருமா தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes