ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
1 பரிமாறுவது
  1. 150கிசிக்கன் கீமா
  2. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  3. 1 தேக்கரண்டிமிளகு தூள்
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  6. 1 மேசைக்கரண்டிபொடியாக நறுக்கிய மல்லி இழை
  7. 2 மேசைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சுத்தம் செய்த சிக்கன் கீமா உடன், மேலே கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து

  2. 2

    நன்றாக கலந்து கொடுத்து, 10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

  3. 3

    10 நிமிடங்கள் கலித்து உருண்டை பிடித்து,வட்ட வடிவில் தட்டி வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு தவாவில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தட்டிய துண்டுகளை சேர்த்து,இரு பக்கமும் திருப்பி விட்டு சிக்கன் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

  5. 5

    பொரித்து எடுத்த சிக்கன் சூடாக இருக்கும் பொழுதே அதன் மேல் சீஸ் துண்டை சேர்க்கவும்.

  6. 6

    அதே தவாவில், இரண்டாக வெட்டிய பர்கர் பன்னை இளஞ்சூடாக்கி எடுத்துக்கொள்ளவும்.

  7. 7

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ், 2 மேஜைக்கரண்டி மயோனைஸ், 1 மேஜைக்கரணரடி மஸ்டர்ட் சாஸ் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

  8. 8

    தயார் செய்த பன் மேலே, தயார் செய்த சாஸை தேவைக்கேற்ப தடவிக்கொடுக்கவும்.

  9. 9

    அதன் மேலே பொரித்த சிக்கனை வைத்து, அரிந்த தக்காளி துண்டுகள், லெட்டயூஸ் இலைகள் கொண்டு அடுக்கவும். (வெங்காயமும் சேர்த்து கொள்ளலாம்)

  10. 10

    ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

  11. 11

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான வீட்டில் செய்த ஜூஸி சிக்கன் பர்கர் தயார்.

  12. 12

    நீங்களும் செய்து பரிமாறி மகிழுங்கள்.. ❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
அன்று

Similar Recipes